டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்
பல்லவி சிற்றிதழ்.
ஆசிரியர் :
திரு.பல்லவி குமார் [எ] சீர்காழி எஸ்.குமார்
சீர்காழி.
வணக்கம் நண்பர்களே.
சீர்காழியிலிருந்து, பல்லவபுரத்து இளவரசியின் அழகுக்கும், அறிவிற்கும் சற்றும் குறைவில்லாத வகையில் தமிழக இலக்கிய வெளியில் 1986 களில் வெற்றி முரசு கொட்டிய சிற்றிதழ் தான் " பல்லவி ". இந்த இதழ் ஒரு கூட்டுக் குழுவாக திரு.பல்லவி குமார் அவர்கள் தலைமையில் வெளி வந்துள்ளது.
சிறுகதைப் போட்டி முடிவுகள்
சிற்றிதழ்கள் உலகம் சிறுகதைப் போட்டி முடிவுகள்.
வணக்கம் நண்பர்களே.
சிற்றிதழ்கள் உலகம் நடத்திய சிறுகதை போட்டிக்கு 15 கதைகள் வர பெற்றன. அந்த கதைகளின், எழுதியவர்களின் பெயருக்கு பதிலாக எண் வழங்கப்பட்டு ஒப்புக் கொண்ட 4 நடுவர்களின் இமெயிலுக்கு அனுப்பப்பட்டது. அதில் கவிஞர் ஜெய தேவன் அவர்களின் கணினி பழுதடைந்த காரணத்தால் அவர் பங்கேற்க்கவில்லை. மற்ற 3 நடுவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகையின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதில் நம்முடைய பணி என்பது ஒருங்கிணைப்பு மட்டும் தான்.
கடும் போட்டி. ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இடம் நழுவிப் போகும் நிலை. இந்த முடிவுகள் எந்த எழுத்தாளரையும் குறைத்து மதிப்பிடக் கூடியது இல்லை. கடும் போட்டிக்கிடையில் ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று முதலிடத்தை பெறுபவது திருமதி.உமா குமரி உத்ரா [எ ] உமா மஹேஸ்வரி அவர்கள் எழுதிய "தண்ணீர்" என்ற சிறுகதை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள் திருமதி.உமா அவர்களே. அவருக்கு முதல் பரிசாக சிற்றிதழ் ஒன்றுக்கு ரூ .300/= சந்தா செலுத்தப்படும். இந்த சிறுகதை மகா கவி சனவரி மாத சிற்றிதழில் வெளிவர இருக்கிறது.
சிற்றிதழ் வாசகர் விமர்சனம்
பெயல் ஆய்விதழ்
ஆசிரியர்: டாக்டர்.செந்தில்குமார்
கோவை.
வணக்கம் நண்பர்களே.
இதழியல் துறையில் ஒரு புதிய சகாப்தமாக வெளி வருகிறது பெயல் ஆய்விதழ். ஆய்வுக்காக மட்டுமே பிரத்தியேகமாக வரும் இதழ். டாகடர்.செந்தில்குமார் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, பல வல்லுநர்களை குழு உறுப்பினர்களாக கொண்டு கோயம்புத்தூரிலிருந்து பீடு நடை போடும் இதழ் தான் பெயல்.
சிற்றிதழ் விமர்சனம் - 4
அம்பறா கவிதையிதழ்
ஆர்ப்பரிக்கும் கவிதையிதழ்
வணக்கம் நண்பர்களே .
சேலம் உருக்காலை மன மகிழ் முத்தமிழ் மன்றத்தின் இலவச வெளியீடாக வரும் சிற்றிதழ் தான் அம்பறா. இது ஒரு ஆர்ப்பரிக்கும் கவிதையிதழ் என்று கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அத்தனையும் கவிதைகள். அதிலும் குறிப்பாக மன்ற உறுப்பினர்களின் கவிதைகள். 17 கவிதைகள். அத்தனையும் முத்துக்கள். ஒன்றை படிக்க ஆரம்பித்து நிறுத்த முடியாமல் அத்தனையும் படித்து முடித்து தான் நிறுத்தினேன்.
டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்கள்
சிற்றிதழ் எண் : 3.
கலைச் சோலை இலக்கிய இதழ்
காலாண்டிதழ்.
ஆசிரியர் : திருமலை சோமு
சென்னை.
சிற்றிதழ் உலகில் பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அப்படி ஒரு நிகழ்வாக நடந்தது தான் கலைச் சோலை இலக்கிய இதழின் வெளியீடு என்றால் மிகையாகாது. ஆம் நண்பர்களே.
ஒரு இலக்கிய எழுத்தாளுமையுடனான நட்பும், உரையாடலும்.
இலங்கை இலக்கிய எழுத்தாளுமை திரு.ரத்தின அய்யர் பத்மனாப அய்யர்.
எனது வாழ்நாளில் மகிழ்ச்சியான நாட்களாக கருதக் கூடிய நாட்களில் இன்றும் ஒன்றாக கருதுகின்றேன். ஆம். ஒரு ஆண்டுக்கு முன்பு அய்யா அவர்களுடன் நட்பு வேண்டி நான் விடுத்த அழைப்பு ஏற்கப்படாமலிருந்தது. அதில் எனக்கு வருத்தம் இல்லை. ஏன் என்றால் நம் செயல்பாடுகளை அவருக்கு அறியப்படுத்துவதில் ஏற்பட்ட தொய்வாகத்தான் நான் எடுத்துக் கொண்டேன். அப்படி ஒரு நிலை இருந்தால் அந்த நண்பர்களுடைய தளங்களுக்கு நானே வலியபோய் பதிவிற்கான பின்னூட்டங்களில் என் கருத்தை பதிவு செய்வேன். பிறகு அவர்களின் பார்வைபட்டு என்னை ஏற்றுக் கொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளது.
சிற்றிதழ் வாசகர் விமர்சனம்
வளரி சிற்றிதழ் குறித்த வாசகர் எழுத்தாளர் திரு.சுப்ரா வே. சுப்ரமணியன் அவர்களின் விமர்சனம்
வணக்கம் நண்பர்களே.
சிற்றிதழ்களை வாசகர்கள் மூலம் விமர்சனப்படுத்த " சிற்றிதழ் கொத்து புரோட்டா " என்ற பகுதியை சிற்றிதழ்கள் உலகம் அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக வளரி சிற்றிதழ் வாசகர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பப்பட்டு பெறப்பட்ட விமர்சனத்தில் சிறந்த விமர்சனமாக தேர்வு செய்யப்பட அய்யா திருநெல்வேலி சுப்ரா வே. சுப்ரமணியன் அவர்களின் விமர்சனத்தை இங்கே பதிவு செய்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
அய்யா அவர்களுக்கு வளரி சிற்றிதழ் ஒரு ஆண்டுக்கு அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள் அய்யா.