Translate

Thursday, April 13, 2017

டிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ்

டிரங்குப் பெட்டியிலிருந்து - மங்களம் வார இதழ்
மங்களம் வார இதழ்,
ஆசிரியர் : எம்.சி.வர்ஹீஸ்,
வெளியீடு : மங்களம் குழுமம், கேரளா.

கேரளத்தின் முதன்மை இதழாக திகழ்ந்த மங்களம் [மலையாளம்] இதழை வெளியிட்டு வந்த மங்களம் குழுமத்திலிருந்து வந்த தமிழ் வார இதழ் தான் மங்களம் வார இதழ்.





தமிழ்ப் பத்திரிக்கை உலகில் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்ற இதழாக வந்தது. அதற்குக் காரணம் மங்களம் மலையாளம் இதழ் மலையாள பத்திரிக்கை உலகில் மலையாள மனோராமா இதழுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து 20லட்சம் பிரதிகள் என்ற சாதனையைப் படைத்து முதலிடைத்தை பெற்றிருந்த நேரத்தில், அவர்களின் பார்வை மற்ற  மொழிகளில் திரும்பி மங்களம் தமிழ் இதழின் வெளியீட்டிற்கு வழி கோலியது என்றும், அந்த குழுமத்திலிருந்து நாளிதழும், பால மங்களம் என்ற சிறுவர்  இதழும் வெளி வந்ததாக நண்பர் திரு.முகம்மது பாட்சா அவர்கள் தன் நினைவலைகளிலிருந்து நம்மிடம் வெளிப்படுத்தினார். 
































2 ஆண்டுகள் சிறந்த இதழாக வெளி வந்த மங்களம் இதழ் மௌனித்துப் போனது துயரமான நிகழ்வு. இந்த  நேரத்தில் மங்களம் இதழை இங்கே வெளிக் கொண்டு வர காரணமாக இருந்தவர் முகநூல் நண்பர் திரு.வளவன் கரிகாலன் அய்யா அவர்கள். அவர் தான் முதலில் இந்த இதழ்  பற்றியும், தன் எழுத்துக்கள் வெளி வந்த  அந்த இனிமையான நினைவுகளையம்  பகிர்ந்து கொண்டதுடன், தன் டிரங்குப் பெட்டியிலிருந்து பாதுகாப்பாக வைத்திருந்த 3 இதழ்களின் படங்களையும் நமக்கு அளித்து உதவினார். இந்த பதிவிற்கு முழு முதற் காரணம் வளவ கரிகாலன் அய்யா தான். நன்றி அய்யா.




அடுத்து திரு.கணேஷன் பாலா அவர்கள் அடுத்த பொக்கிஷத்தை வெளியில் எடுத்து பெரும் மகிழ்சசியைக் கொடுத்தார். அது தான் மங்களம் முதல் இதழின் அட்டை படம். அவர் மிகச்  சிறந்த இதழாக வெளி வந்தது என்றும் பதிவு செய்தார். 



எழுத்தாளர் திரு. ஃபிர்தவ்ஸ்  ராஜகுமாரன் அவர்கள், 1988 - 1990 களில் வெளி வந்த மங்களம் இதழ்களில் குறைந்தது நான்கு தொடர்கதைகள் இடம் பெற்றிருந்தாகவும், அப்போது நடத்தப்பட்ட சிறுகதை போட்டியில் தன்னுடைய சிறுகதை இரண்டாம் பரிசாக ருக்கு.750/= பெற்றதாகவும், தன்  மகிழ்ச்சியை   பகிர்ந்து கொண்டார். 




கோவையிலிருந்து அய்யா திரு.துடுப்பதி ரகுநாதன் அவர்கள் தன் கதைகள் நிறைய வெளி வந்ததாகவும், ஆரம்பத்திலிருந்த ஆசிரியர் மாறி கோவி.மணிசேகரன், வலம்புரி ஜான் போன்றவர்களும் ஆசிரியராக பணியாற்றியதாகவும், தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மங்களம் இதழில் இலக்கிய உலகின் பிரபலங்கள் எல்லாம் பங்கெடுத்துள்ளனர். லட்சுமி ராஜ ரத்னம், ராஜேந்திர குமார், ராஜேஷ் குமார் போன்றவர்கள் தொடர் கதைகள் எழுதி உள்ளனர். பிரபஞ்சன் அவர்கள் கனவு மெய்யப்பட வேண்டும் என்ற தொடர் கட்டுரையும் எழுதி உள்ளார். நிறைய கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. கவிஞர் திருமாவளவனின்  'தனி மனிதர்கள்' என்ற கவிதையும், பரிணாமனின் 'தொட்டு விடும் தூரத்தில்...' என்ற கவிதையும்  சிறப்பாக உள்ளது. சினிமா செய்திகள், துணுக்குகள், நகைச் சுவையும் இடம் பெற்றுள்ளன.  
2 ஆண்டுகள் வெளி வந்திருந்த போதிலும் தமிழ்  பத்திரிக்கை உலகில் சிறந்த இடத்தையும், வாசகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்த அத்தகைய மங்களம் இதழை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் சிற்றிதழ்கள் உலகம் பெருமை கொள்கிறது.
வாழ்த்துக்கள் நண்பர்களே.

கிருஷ்.ராமதாஸ், 
சிற்றிதழ்கள் உலகம், 
12.04.2017.

1 comment:

  1. நல்ல இதழ்களை வாங்கிப் படித்து அவற்றை ஊக்குவிக்கும் மனோபாவம் நம்மிடையே இன்னும் அதிகமாக வளர வேண்டும்.

    ReplyDelete