Translate

Wednesday, January 11, 2017

சிற்றிதழ்கள் மேம்பாட்டுக்காக ஒரு மின்னிதழ்


சிற்றிதழ்கள்  மேம்பாட்டுக்காக ஒரு  மின்னிதழ்.

சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்
ஆசிரியர் : கிருஷ்.ராமதாஸ்.


வணக்கம் நண்பர்களே.
உலக இலக்கிய வரலாற்றில் சிற்றிதழ்கள் மேம்பாட்டிற்காக வெளிவந்த முதல் சிற்றிதழ் என் ஆதர்ச நயகன் அய்யா திரு.பொள்ளாச்சி நசன் அவர்களில் 1990 களில் வெளியிட்ட " சிற்றிதழ் செய்தி" என்ற இதழாகும்.
அதன் பிறகு அதே சிற்றிதழ்கள் மேம்பாடு என்ற ஒற்றைக்  கொள்கையுடன் வெளி வரும் இரண்டாவது இதழ் தான் "சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்" என்பதை பெருமையுடன் அறிவிக்கின்றேன். 


சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் வேலைகள் முடிந்து வெளியீடுக்கு தயாராகிவிட்டது. கடந்த ஒரு வாரமாக ஓட்டம்.... ஓட்டம்.. தான். இந்த இதழ் வேலையில் என் பணி ஒருங்கிணைப்பு பணி தான். கதை, கவிதை, கட்டுரை, படங்களை திரட்டி வடிவமைப்புக்கு அனுப்புவது.
இந்த இதழ் வெளிவருவதில் பெரும் பங்காற்றி உள்ளவர் திரு.தமிழ் நெஞ்சம் அமின், பிரான்ஸ், அவர்கள் தான். என்னை விடாது துரத்திக் கொண்டே இருந்தார். அவருடைய தூண்டுதலின் பேரிலும், தம்பி கார்த்திகேயன் தொடர்ந்த அழைப்பின் பேரிலும் இதை நிறைவேற்ற் முடிந்திருக்கிறது என்றால் மிகையாகாது.
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழின் இணை ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் திரு.தமிழ் நெஞ்சம் அமின் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்.
சில நண்பர்கள் தாமதமான போதிலும், என் வேண்டுகோளை ஏற்று குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பிவிட்டார்கள். குறிப்பாக அருமை நண்பர் திரு.மார்கண்டன் முத்துசாமி அவர்கள், ஒரு பக்கம் வேலைப்பளு, ஒரு பக்கம் உடல் நிலை சரியில்லாத சமயத்திலும் அனுப்பி வைத்துவிட்டார். நன்றி நண்பர்.
என் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர் குழுவில் இணைந்துள்ள அன்பு நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.
1. திரு.கார்த்திகேயன் சரவணன், குவைத்.
2. திரு.முருக.தீட்சண்யா, மயிலாடுதுறை.
3. திரு.கீழை அ.கதிர்வேல், சிங்கப்பூர்.
இதழ் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் அதற்கான முழுப் பொறுப்பும் என்னை மட்டுமே சாரும். விமர்சனக் கணைகளின் மூலம் துளைத்தெடுங்கள். அதே நேரத்தில் இதை இன்னும் செழுமையாக்க தக்க ஆலோசனைகளை பதிவிட மறக்காதீர்கள் என்ற வேண்டுகோளை மட்டும் உங்களிடம் வைக்கின்றேன்.

13ந் தேதி மாலை துபாய், குவைத், பிரான்ஸ் முதலிய இடங்களில் வெளியிட தீர்மானித்துள்ளோம். விழாவெல்லாம் கிடையாது. எங்கள் அறை நண்பர்களை வைத்து மட்டுமே வெளியிடுவது என்றும், முடிந்தால் போட்டோ, வீடியோ பிடித்து வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளோம்.
14ந் தேதி முதல் நண்பர்களுக்கும், சிற்றிதழாளர்களுக்கும் இமெயில் மூலம் பி.டி.எப். பிரதி அனுப்பப்படும். 14ந் தேதி அன்று உங்கள் இமெயிலை பதிவு செய்யுங்கள். இப்போது பதிய வேண்டாம்.
என் ஒரே நம்பிக்கை இந்த மின்னிதழ் மூலம் சிற்றிதழ்களுக்கு ஒரு கடுகளவு உதவியாவது செய்ய முடியும் என்பது மட்டுமே. அது வாசகர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது.
இந்த இதழ் உருவாக்கத்திற்கு என் மனதில் வித்திட்ட, அதை செயல்படுத்து தீரத்தை பெற எனக்கு ஆர்வமூட்டிய, தங்கள் எழுத்து பங்களிப்பை வழங்கிய , இதழ் வடிவமைப்பில் உதவிய அத்துணை உள்ளங்களுக்கும் என் இதய பூர்வமான நண்றியை உரித்தாக்குகின்றேன். 
நன்றி. வாழ்த்துக்கள் நண்பர்களே.

கிருஷ்.ராமதாஸ்,
ஆசிரியர் & வெளியீட்டாளர்,
சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ்.
12.01.2017.

5 comments:

 1. இந்த இதழை எங்கு பெறுவது ... விவரம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  ReplyDelete
 2. இதழ் அருமை அய்யா...
  சில பிரச்சினைகளால் தொடர்பில் வர முடியவில்லை.

  ReplyDelete
 3. அருமை

  நன்றிகளும்

  வாழ்த்துகளும்

  ReplyDelete