Translate

Showing posts with label சிறுகதைப் போட்டி முடிவுகள். Show all posts
Showing posts with label சிறுகதைப் போட்டி முடிவுகள். Show all posts

Friday, December 23, 2016

சிறுகதைப் போட்டி முடிவுகள்

சிறுகதைப்  போட்டி முடிவுகள்

சிற்றிதழ்கள் உலகம் சிறுகதைப்  போட்டி முடிவுகள்.

வணக்கம் நண்பர்களே. 
சிற்றிதழ்கள் உலகம் நடத்திய சிறுகதை போட்டிக்கு 15 கதைகள் வர பெற்றன. அந்த கதைகளின்,  எழுதியவர்களின் பெயருக்கு பதிலாக எண்  வழங்கப்பட்டு ஒப்புக் கொண்ட 4 நடுவர்களின்   இமெயிலுக்கு அனுப்பப்பட்டது. அதில் கவிஞர் ஜெய தேவன் அவர்களின் கணினி பழுதடைந்த காரணத்தால் அவர் பங்கேற்க்கவில்லை. மற்ற 3 நடுவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகையின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதில் நம்முடைய பணி  என்பது  ஒருங்கிணைப்பு மட்டும் தான். 

கடும் போட்டி. ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இடம் நழுவிப்  போகும் நிலை. இந்த முடிவுகள் எந்த எழுத்தாளரையும் குறைத்து மதிப்பிடக் கூடியது இல்லை. கடும் போட்டிக்கிடையில் ஒரு மதிப்பெண் அதிகம் பெற்று முதலிடத்தை பெறுபவது  திருமதி.உமா குமரி உத்ரா [எ ] உமா மஹேஸ்வரி அவர்கள் எழுதிய  "தண்ணீர்" என்ற சிறுகதை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள் திருமதி.உமா அவர்களே. அவருக்கு முதல் பரிசாக சிற்றிதழ் ஒன்றுக்கு ரூ .300/= சந்தா  செலுத்தப்படும். இந்த சிறுகதை மகா கவி சனவரி மாத சிற்றிதழில் வெளிவர இருக்கிறது.