Translate

Monday, June 5, 2017

சிற்றிதழ்கள் உலகம் 4வது இதழ் வெளியீடு

சிற்றிதழ்கள் உலகம் 4வது இதழ் வெளியீடு 
ஹைக்கூ சிறப்பிதழ் 
ஆசிரியர் : கிருஷ்.ராமதாஸ்.

வணக்கம் நண்பர்களே.
இன்று சிற்றிதழ்கள் உலகம் ஹைக்கூ சிறப்பிதழ்  வெளியிடப்பட்டது. இந்த இதழின் சிறப்புகள்:





1. தமிழ் ஹைக்கூவின் தோற்றமும் வளர்சசியும் - கன்னிக்கோவில் ராஜா அவர்களின் சிறப்புக் கட்டுரை.

2. புத்தகயா பயனாக கட்டுரை - திருவையாறு க.இரத்தினகிரி அவர்களின் கட்டுரை, சிறப்புப் படங்களுடன் இடம் பெற்றுள்ளது.


3. ஹைக்கூ எழுத்தாளர்கள், ஹைக்கூ பற்றிய புத்தகம் எழுதிய எழுத்தாளர்கள் என 40 எழுத்தாளர்களின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


4. வந்த , வந்து  கொண்டிருக்கும் ஹைக்கூ சிற்றிதழ்களின் படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. சுமார் 10 பக்கங்களில் பிரபலங்களின் ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன. - காவனூர் சீனுவாசன், வதில்லை பிரபா, சென்னிமலை தண்டபாணி, இரா.ரவி, நாகா [துபாய்], கா.நா.கல்யாணசுந்தரம், ராஜாகவி ராகுல், கார்த்திக் சரவணன், மாறன் மணி, இரா.தயாளன், மகிழ்நன் மறைக்காடு, நாகூர் சலீம், தமிழ் மொழி, ஆ.ராமு, பெண்ணியம் செல்வக்குமாரி, துவாரகா சாமிநாதன், புலவர் ரவீந்திரன் , தமிழ் உதயா, சக்தி அருளானந்தம் , சுப்ரா வே.சுப்ரமணியன் இடம் பெற்றுள்ளன.
6. கவிதைகள் - அன்பாதவன், வளவ துறையின், லோகநாதன்  ஆறுமுகம், நந்தவனம் சந்திரசேகரன் , பாலமுனை பாறுக், முருக தீட்சண்யா, கிருஷ்.ராமதாஸ்.



7. அறிவோம் - மூவரியில் புறநானுறு - கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் சிறப்புப் பகுதி.
8. சிகரம் தோட்ட பெண்கள் பகுதியில் வீரணங்கை வேலுநாச்சியார் பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது.

9. சிறுகதை - நௌஷாத்கானின் சாத்தானின் என் 666, உமா நாராயணனின் தனிமை இடம் பிடித்துள்ளன.




இதழ்  சிறப்பாக வெளிவர ஒத்துழைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் இதயம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குகின்றேன். குறைகளுக்கு பொருத்தருளி, தொடர்ந்து ஆதரவளிக்க நண்பர்களை வேண்டுகின்றேன்.
நன்றி. வாழ்த்துக்கள்.

கிருஷ்.ராமதாஸ்,
05.06.2017.


5 comments:

  1. அருமை...
    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. இதழின் உள்ளடக்கத்தை மிக எளிதில் புரியும்படியாகப் பகிர்ந்த விதம் அருமையாக இருந்தது. தங்களின் சிற்றிதழ் பல துறைகளைச் சார்ந்த பதிவுகளோடு மிகவும் சிறப்பாக உள்ளது. இதழ் மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள். புத்தகயா பதிவைப் பார்த்ததும் நாங்கள் புத்தகயா சென்றது நினைவிற்கு வந்தது.

    ReplyDelete