Translate

Friday, November 25, 2016

இலக்கிய எழுத்தாளுமையுடனான நட்பும், உரையாடலும்

ஒரு இலக்கிய எழுத்தாளுமையுடனான நட்பும், உரையாடலும்.

இலங்கை இலக்கிய எழுத்தாளுமை திரு.ரத்தின அய்யர் பத்மனாப அய்யர்.

எனது வாழ்நாளில் மகிழ்ச்சியான நாட்களாக  கருதக் கூடிய நாட்களில் இன்றும் ஒன்றாக கருதுகின்றேன். ஆம். ஒரு ஆண்டுக்கு முன்பு அய்யா அவர்களுடன் நட்பு வேண்டி நான் விடுத்த அழைப்பு ஏற்கப்படாமலிருந்தது. அதில் எனக்கு வருத்தம் இல்லை. ஏன் என்றால் நம் செயல்பாடுகளை அவருக்கு அறியப்படுத்துவதில் ஏற்பட்ட தொய்வாகத்தான் நான் எடுத்துக் கொண்டேன். அப்படி ஒரு நிலை இருந்தால் அந்த நண்பர்களுடைய தளங்களுக்கு நானே வலியபோய் பதிவிற்கான பின்னூட்டங்களில் என் கருத்தை பதிவு செய்வேன். பிறகு அவர்களின் பார்வைபட்டு என்னை ஏற்றுக் கொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளது.


அதே போன்று இன்று திரு.பேனா மனோகரன் அய்யாவின் படிகள் சிற்றிதழ் பற்றிய பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை கண்டு அய்யா அவர்கள் நட்பிற்கான அழைப்பை ஏற்றுக் கொண்டதோடு, என்னுடன் உரையாட மெசஞ்சர் மூலம் அழைத்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்வாக இருந்தது.
அவருடைய எழுத்தாளுமையும், இலக்கிய உலகின் செயல்பாடும் மிகப் பரந்தது. உலகளாவியது. ஈபிள் டவரின் அடியிலிருந்து உச்சியை நோக்கி வாயப் பிளந்து கொண்டு பார்க்கும் ஒரு சாதரண வாசகன் மன நிலை தான் என்னுடையது. அத்தகைய ஒருவருடன் நேரடியாக பேசும் வாய்ப்பு என்னை பதட்டப்படச் செய்தது.

ஆம். சுமார் 15 நிடங்கள் உரையாடினார். அதில் சிற்றிதழ் செயல்பாடுகளையும், சிற்றிதழ்  ஆவணப்படுத்தலில், நூலகம் இணையத்தளத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார். மேலும் தமிழ் நாட்டில் உள்ள பிரபல எழுத்தாளர்களுடனான தொடர்புகள் குறித்தும், தான் சென்னையில் கலந்து கொண்ட நிகழ்வு குறித்தும் தெரிவித்தார்.
நான் என் சிற்றிதழ் செயல்பாடுகள் குறித்தும், இதழ்களை ஆவணப்படுத்தும் முயற்சி குறித்தும், சிற்றிதழ் ஊக்குவிப்புத் திட்டம் குறித்தும் அய்யாவிடம் விளக்கினேன். அய்யா அவர்கள் மகிழ்ந்து பாராட்டினார்.

ஆவணப்படுத்துதலில் அய்யா. திரு.பொள்ளாச்சி நசன் அவர்களின் செயல்பாட்டையும். படிப்பகம்.காம் இணைய செயற்பாட்டையும் பெரிதும் பாராட்டினார்.

மேலும் அவரிடமுள்ள,  தமிழகத்திலிருந்து  வெளி வந்த " படிகள் " சிற்றிதழ் குறித்தும் எங்களுடைய உரையாடல் இனிதாக அமைந்தது.


என்னை ஒரு பொருட்டாக மதித்து என் நட்பை ஏற்று, என்னுடன் உரையாட முன் வந்த பெருந்தன்மைக்கு என் வணக்கத்தையும், நன்றியையும் உரித்தாக்குகின்றேன்.
நன்றி. வாழ்த்துக்கள் அய்யா.

கிருஷ்.ராமதாஸ், 

சிற்றிதழ் நலம் விரும்பி.
25.11.2016.

No comments:

Post a Comment