Translate

Thursday, December 15, 2016

சிற்றிதழ் விமர்சனம் - 4

சிற்றிதழ் விமர்சனம் - 4
அம்பறா கவிதையிதழ் 
ஆர்ப்பரிக்கும் கவிதையிதழ்

வணக்கம் நண்பர்களே .

சேலம் உருக்காலை  மன மகிழ் முத்தமிழ்  மன்றத்தின் இலவச வெளியீடாக வரும் சிற்றிதழ் தான் அம்பறா. இது ஒரு ஆர்ப்பரிக்கும் கவிதையிதழ் என்று கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் அத்தனையும் கவிதைகள். அதிலும் குறிப்பாக மன்ற உறுப்பினர்களின் கவிதைகள். 17 கவிதைகள். அத்தனையும் முத்துக்கள். ஒன்றை படிக்க ஆரம்பித்து  நிறுத்த முடியாமல் அத்தனையும் படித்து முடித்து தான் நிறுத்தினேன். 


அதற்கு இன்னொரு காரணம் உண்டு. என் முக நூல் நண்பர் திரு.கூ.ரா. அம்மாசையப்பன் ராமசாமி அவர்கள் மூலம் பி.டி.எப். பிரதியும் பெற்றேன். ஆனால் தவறவிட்டு அவரின் வருத்தத்திற்கு ஆளாக நேரிட்டது.  எனக்கு மன உளைச்சல். 3 மணி நேரம் தேடி கண்டு பிடித்தேன்.
கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன், காணாமல் போன அம்பறாவை கண்டுபிடிச்சேன் என்று பாட்டே வந்துவிட்டது. அத்தனை மகிழ்ச்சி. ஆம் நண்பர்களே, நண்பர்களிடம் அவப்  பெயர் எடுப்பது  துரதிர்ஷ்டமானது. 

இனி இதழுக்கு வருவோம். கவிதையின் தலைப்பு : பள்ளிக் கூடம் 
இந்த நிகழ்ச்சிக்கு கவிஞர்கள் விஜயராஜ் காந்தி அவர்களும், யாழ் தன்விகா அவர்களும் தலைமையேற்று சிறப்பித்துள்ளனர்.

1. விஜயராஜ் காந்தி - பள்ளிக்கு கூடங்களின் அவல  நிலையை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகின்றார். - அதே மூத்திர நெடுடியுடன் அழுக்குகளின்   சாயமேறிய கழிவறை கிண்ணங்கள் - அருமை.

2. ஓமலூர் பாலு - ஒரு புள்ளியை வைத்து கலக்கியிருக்கின்றார் பாலு அவர்கள். கல்விக் கூடம் - கலவிக்கு கூடம் - ஒப்பீடு அருமை.                                  எதிர்கால கனவுகள் விதைக்கப்படும் இடம் 
     இறந்த கால நிகழ்வுகள் புதைக்கப்படும். 
எனக்கு மிகவும் பிடித்த கவிதை. உங்களுக்கும் பிடிக்கும்.

3. பொன்.சந்திரன்  - அடுத்த அதிரடி நாயகன். இவரைப் போன்றவர்கள் சிற்றிதழ்களால் அவசியம் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.
   உதிரத்தில்  கலந்து
   உணர்வுகளாய் வளர்ந்தது 
   உணர்வுகளும் உணர்ச்சிகளும்  உறவாடியது  
- கலக்குரிங்க  சந்திரன். வாழ்த்துக்கள். 

4. திவ்யா செந்தில்குமார் - அத்தனையும் கொடுத்த பள்ளிக் கூடத்தின் பெருமையை பறை சாற்றுகின்றார். 
திறமையை வளர்க்கணும் என்றாய்
மேற்பட்ட போட்டிகளை  கொடுத்தேன். 

5. கூ.ரா. அம்மாசையப்பன் ராமசாமி  - அன்றைய கல்வி முறையையும், இன்றைய கல்வி முறையையும் ஒப்பீடு ஒன்றை தந்துள்ளார். அத்தனை வசதிகளும் இன்று படிப்பதற்கு கிடைத்த போதும் நம் தயக்கம் தான் தடையாக இருக்கிறது என்று பதிவு செய்துள்ள அவர் தடையை உடைத்து வெளியே வந்து வெற்றிக் கொடி நாட்டுவோம் என்று முடிக்கின்றார். அருமை நண்பர்.

17 கவிதைகள் அத்தனையும் அருமை. தவிர்க்க முடியாத காரணங்களால் அத்தனை கவிதைகளை பற்றிய கருத்தையும் பதிவிட முடியவில்லை நண்பர்களே. அனைவருக்கும் சிற்றிதழ்கள் உலகம் வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றது.
மன மகிழ் முத்தமிழ்  மன்ற குழுவினருக்கும், குறிப்பாக செயலாளர் திரு.சண்முகம் அவர்களுக்கும் வாழ்த்துதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் அனுமதி அளித்தால் இந்த இதழை இணையம் மூலம் சிற்றிதழ் வாசகர்களுக்கு இலவசமாக கொண்டு செல்ல தயாராக இருக்கின்றேன் நண்பர்களே.

அம்பறா கவிதையிதழ்,
வெளியீடு : 
மன மகிழ் முத்தமிழ் மன்றம்,
சேலம் உருக்காலை,
211, அம்பேதகர் பவன், 
மோகன் நகர், 
சேலம் - 636030.

கிருஷ்.ராமதாஸ்,
சிற்றிதழ்கள் உலகம்,
16.12.2016.



No comments:

Post a Comment