டிரங்குப் பெட்டியிலிருந்து இலக்கிய வெளிக்கு வரும் சிற்றிதழ்
பல்லவி சிற்றிதழ்.
ஆசிரியர் :
திரு.பல்லவி குமார் [எ] சீர்காழி எஸ்.குமார்
சீர்காழி.
வணக்கம் நண்பர்களே.
சீர்காழியிலிருந்து, பல்லவபுரத்து இளவரசியின் அழகுக்கும், அறிவிற்கும் சற்றும் குறைவில்லாத வகையில் தமிழக இலக்கிய வெளியில் 1986 களில் வெற்றி முரசு கொட்டிய சிற்றிதழ் தான் " பல்லவி ". இந்த இதழ் ஒரு கூட்டுக் குழுவாக திரு.பல்லவி குமார் அவர்கள் தலைமையில் வெளி வந்துள்ளது.
இந்த குழுவில் முல்லை நாதன், மாவே.ரவிச்சந்திரன், ஆர்.எஸ்.ராஜ், அவர்களின் இணையில்லா ஒத்துழைப்புடன் 1986 - 1987 களில் வெளிவந்த இதழ் தான் பல்லவி. முதலில் மாத இதழாக 7 இதழ்கள் வெளிவந்துள்ளன.
இந்த இதழின் வளர்ச்சிக்கு இலக்கிய நண்பர்களின் உதவி பெரும் பங்காற்றியுள்ளது. குறிப்பாக வேலையில்லா பட்டதாரிகளால் நடத்தப்பட்ட இந்த இதழுக்கு தாஜ், நாகூர் ரூமி, சாதிக், தேவகி ராமலிங்கம், வெங்கடேச பாரதி, தேஜா, ஓவிய ஆசிரியர் சுந்தரராஜன் ஆகியோர் செய்த உதவிகளை தன் பசுமை நினைவாக பகிர்ந்தார் பல்லவி குமார் அவர்கள். இலக்கிய நண்பர்களின் தொடர்புகளை பல்லவிக்கு ஏற்படுத்தி கொடுத்த எழுத்தாளர் சாரதா நாகரத்தினம் அவர்களின் பணி மகத்தானது என்றார்.
பல்லவி இதழின் இலக்கிய பங்களிப்பை தங்களின் படைப்புகள் மூலம் செழுமைப்படுத்தியவர்கள் - பட்டுக்கோட்டை ராஜா, இராஜேசு, இரவி, முல்லை, மணிவண்ணன், ஞானாம்பாள், இராசி.பன்னீர் செல்வம், அறந்தாங்கி சங்கர்,
கவிதையிதழாக வெளி வந்த பல்லவியில் குறிஞ்சி வேலன் அவர்களின் " இலக்கிய உலகிலே இவர்கள் " என்ற கட்டுரை உலக படைப்பாளிகளை தமிழக இலக்கிய வெளிக்கு கொண்டு வந்த பெருமைக்குரிய படைப்பாகும். குறிஞ்சி ஞான வைத்தியநாதன் அவர்களின் கவிதைகள் சிறப்பாக திகழ்ந்துள்ளது. கவிஞர் மு.மேத்தா, விக்ரமாதித்யன், பாபநாசம் குறள் பித்தன் ஆகியோர் படைப்புகள் பல்லவிக்கு பெருமை சேர்த்துள்ளன.
குறிப்பாக தராசு இதழின் துணை ஆசிரியர் எம்மார் திரு.ராமலிங்கம் அவர்களின் உதவி மறக்க இயலாதது என்றும் குறிப்பிட்டார்.
மாத இதழாக வந்து கொண்டிருந்த பல்லவி காலாண்டிதழாக மாற்றம் பெற்று 4 நான்கு இதழ்களுடன் மௌனித்துப் போயிற்று. காலாண்டிதழில் பட்டுக்கோட்டை ராஜாவின் கவிதைகளும், டி.எஸ்.வி.அசோகன், சீர்காழி எஸ். குமார் ஆகியோரின் சிறுகதைகள், குறிஞ்சி வேலனின் ஜப்பானிய பெண் படைப்பாளி யூக்கோ ஸுசீமா அவர்களைப் பற்றிய கட்டுரையும், குறிஞ்சி ஞான வைத்தியநாதனின் மொழி என்ற கட்டுரையும் வெளியாகி வாசகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதாக குறிப்பிட்டார்.
கோவை.பிரபாகரன் , சுகா பிரேம்குமார், கர்நாடகா கோ.வை.வாசன், சவுதியிலிருந்து முகம்மது பாருக், எஸ்.ஆர்.சுவாமி, சீர்காழி எஸ்.குமார், புலவர் எஸ்.ராகவேந்திரன் போன்றவைகளின் கவிதைகள் இதழுக்கு சிறப்பு செய்தவைகளாகும்.
வால்ட் விட்மேன் கவிதையும், நிறைய விளையாட்டு செய்திகளும், இதர செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன. முதல் இதழில் வெளியான தாஜ் அவர்கள் எழுதிய புரிந்து கொள்வீர் புதுக் கவிதைகளை என்ற கட்டுரைத் தொடர் பலரையும் கவர்ந்ததாகவும் பல்லவி குமார் அவர்கள் குறிப்பிட்டார்.
தன் பசுமை நினைவுகளையும், தன நண்பர்களின் நினைவையும் நான் மீட்டு தந்து மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். நண்பர்கள் பணி நிமித்தமாக பல் வேறு ஊர்களில் இருப்பதையும், ஒரு சிலர் வெளி நாடுகளில் இருப்பதையும் குறிப்பிட்டு, அவர்களுடன் பழகிய நாட்கள் மீண்டும் வராதா என்ற ஏக்கப் பெருமூசசு அவரின் பதிவிலிருந்து நான் புரிந்து கொள்ள முடிந்தது. இதழுக்காக பெரும் பங்காற்றிய சாரதா நகரத்தினத்தின் மறைவு தன்னை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியதாகவும் குறிப்பிட்டார்.
பல்லவி சிற்றிதழ் சிறப்புமிக்க பவனி வர உதவிய தன தம்பி சீர்காழி எஸ்.இராமேசு, டி .எஸ்.வி.அசோக், குறிஞ்சி வேலன், குறிஞ்சி ஞான வைத்தியநாதன் முதலானோர் செய்த உதவிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் இதயம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குவதாகவும் குறிப்பிட்டார்.
பல்லவி சிற்றிதழைப் பற்றிய என் நினைவூட்டல் தன மனதில் நிறைய நினைவுகளை அழுத்தமாக எழுப்பிவிட்டதாக கூறி பல்லவி குமார் அவர்கள் தன் நன்றியை பகிர்ந்து கொண்டார்.
குறிப்பு: இது போன்ற சிறப்புமிக்க சிற்றிதழ்களை பாதி வழியிலேயே விட்டுச சென்ற சிற்றிதழாளர்களை மீண்டும் வாருங்கள், திட்டமிட்டு செயலாற்றி வெற்றிக் கனி பறிப்போம் என்று அழைக்கின்றேன். இன்று குறைந்த செலவில் இதழைக் கொண்டுவர முயற்சித்து வெற்றிக் கொடி நாட்டுவோம், இலக்கிய உலகில் என்று அழைக்கின்றேன்.
என் வேண்டுகோளை ஏற்று, தன அயராத பணிகளுக்கிடையிலேயும், உரிய தகவல்களை தந்து உதவிய திரு.பல்லவி குமார் அவர்களுக்கு சிற்றிதழ்கள் உலகம் சார்பாக நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இதழில் பங்கெடுத்த அனைவரையும் பாராட்டுகின்றேன்.
நன்றி. வாழ்த்துக்கள்.
கிருஷ்.ராமதாஸ்,
சிற்றிதழ்கள் உலகம்.
28.12.2016.

திரு. பல்லவி குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநிறைய சிற்றிதழ்கள் சில காலம் மட்டுமே வெளிவந்திருக்கின்றன...
எங்கள் பேராசிரியர் 'பாரதி' என்ற சிற்றிதழ் நடத்தினார்... அதுவும் காணாமல் போய் வெகுகாலமாயிற்று... அவரிடம் அதன் பிரதிகள் கூட இருக்காது...
நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது கவி'தா', மனசு, ரோஜா, முகவரி என நட்புக்களின் போட்டியில் விளைந்த கையெழுத்துப் பிரதிகள் எத்தனை எத்தனை... எல்லாம் கல்லூரி வாழ்வோடு காணாமல் போய்விட்டன ஐயா...
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.