Translate

Saturday, November 19, 2016

சிற்றிதழ் வாசகர் விமர்சனம்

சிற்றிதழ் வாசகர் விமர்சனம்

வளரி சிற்றிதழ் குறித்த வாசகர் எழுத்தாளர் திரு.சுப்ரா வே. சுப்ரமணியன் அவர்களின் விமர்சனம்

வணக்கம் நண்பர்களே.

சிற்றிதழ்களை வாசகர்கள் மூலம் விமர்சனப்படுத்த  " சிற்றிதழ் கொத்து புரோட்டா " என்ற பகுதியை சிற்றிதழ்கள் உலகம் அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக வளரி சிற்றிதழ் வாசகர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பப்பட்டு பெறப்பட்ட விமர்சனத்தில் சிறந்த விமர்சனமாக தேர்வு செய்யப்பட அய்யா திருநெல்வேலி சுப்ரா வே. சுப்ரமணியன் அவர்களின் விமர்சனத்தை இங்கே பதிவு செய்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.
அய்யா அவர்களுக்கு வளரி சிற்றிதழ் ஒரு ஆண்டுக்கு அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள் அய்யா.





வளரி – ஆவணி –புரட்டாசி இதழ் – ஒரு பார்வை .
நா . முத்துகுமார் அஞ்சலி எளிமை ஆனால் வலிமை . அற்றைத்திங்கள் ” நூல் வெளியீடு , கொழும்பு விழா குறித்த விவரிப்பும் , படங்களும் மிக நேர்த்தி . நேரலையில் காண்பது போல் உள்ளது . பம்பர ஆணி மூலம் முரண் காட்டும் வள்ளிமுத்துவின் கவிதையும் , சுகன்யா ஞானசூரியின் தமிழீழம் குறித்த சோக நினைவுகள் காட்டும் கவிதையும் , அகிலா ஜீவாலாவின் யதார்த்தமான கவிதையும் , கருணாம்பிகையின் “ சோதனையை சாதனையாக மாற்றும் பெண் “ குறித்த கவிதையும் , அமுதா விஜயகுமாரின் விரல் தேடும் கவிதையும் , சிமாரா அலியின் ஓசை நயம் நிறைந்த கவிதையும் , மகிழ்நன் குறும்பாக்களில் குறிப்பாக காவல் தெய்வம் / பலியாடு கவிதையும் இதழுக்கு அழகு சேர்க்கின்றன . கடந்த கால நினைவுகளை வேறுபட்ட கோணத்தில் அசை போடுவது போல அமைந்துள்ள ஷிர்லி டெளல்ஸனின் கவிதைக்கான  ராமலஷ்மியின் மொழிபெயர்ப்பு நம் சூழலுக்கு ஏற்ப அமைந்திருப்பது நன்று . ஆனந்த வாஹினியின் கவிதைகளில் “ ஏகாந்தம் , வானவில் நாட்கள் , வாழ்ந்து விடலாம் “ ஆகியவை மிக அழகு . இயற்கை , தத்துவம் , வாழ்க்கை என்று பன்முகப் பாடுபொருட்கள் அமைந்துள்ளன .    மு . முருகேஷ் குறித்த அறிமுகம் முழுமையாக அவரது திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது .
அங்கொன்றும் , இங்கொன்றுமாக குறைந்த அளவில் காணப்படும் எழுத்துப் பிழைகள் தவிர்க்கப் பட்டிருக்கலாம் . [ எ . கா . – “ வானவில் நாட்கள் ” கவிதையில் ..... அமர்ரும் புல்லின்.... ] மொத்தத்தில் இதழ் மிகச் சிறப்பு – உள்ளடக்கத்திலும் , வடிவமைப்பிலும் .  
-  சுப்ரா .
வே . சுப்ரமணியன் ,  [ V . SUBRAMANIAN ]
4/496 , மூன்றாவது தெற்குத் தெரு ,
தியாகராஜநகர் ,
திருநெல்வேலி  627011 .
தொடர்பு எண் : 9442328085 .

கிருஷ்.ராமதாஸ்,
19.11.2016.

3 comments:

  1. மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எங்க கவிஞா் ஐயா சொன்னா சாியாத்தானிருக்கும்... வளாிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete