Translate

Thursday, November 17, 2016

புதுவை சிற்றிதழ் இயக்கம்

புதுவை சிற்றிதழ் இயக்கம் 

புதுவையிலிருந்து புதிய உதயம் 

தமிழ் இலக்கிய உலகில் சாதனைகளை படைத்து வரும் சிற்றிதழ்கள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்து, தங்கள் வரலாற்றை பதிவு செய்வதிலும்,  தொடர் வெளியீட்டிற்கான மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுப் பதிலும், அரசு பயன்களைப்  பெறுவதில் அக்கறை கொள்ளுதலும் இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தையும் அளிப்பதாக இருக்கின்றது.

இந்த சூழ்நிலையில் புதுவையிலிருந்து புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் " புதுவை சிற்றிதழ் இயக்கம் " என்ற அமைப்பு துவங்கப் பட்டிருப்பது கடலில் இருக்கும் கப்பலுக்கான கலங்கரை விளக்கமாக வந்திருக்கிறது என்று கூறலாம்.

இந்த அமைப்பின் துவக்க விழாவில் குறைவான சிற்றிதழாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும், நல்ல துவக்கமாக நான் கருதுகின்றேன். குறைவானவர்கள் இருந்தாலும் குறை சொல்ல முடியாத, சிறந்த சிற்றிதழாளர்கள் இணைந்திருப்பது வரவேற்க்க கூடியதாகும். 





இந்த அமைப்பில் :

தலைவர் : புதிய உறவு மஞ்சக்கல் உபேந்திரன் 

செயலாளர் : புதுவை பரணி ரவிச்சந்திரன் 

பொருளாளர் : புதுவை பாரதி பாரதிவாணர்  சிவா 

தேர்வு செய்யப்பட்டுள்ளனர். . 

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  

இந்த அமைப்பினர் புதுவை முதல்வர் திரு.நாராயணசாமி , அமைசார்  திரு. மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்திருப்பது நல்ல தொடக்கத்தை உறுதி செய்துள்ளது. 




புதுவை சிற்றிதழ் இயக்கம் முறைப்படி சட்டமன்ற உறுப்பினர் திரு.லட்சுமி நாராயணன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மகளிர் ஓசை, தொல் புதையல், புதுவை பாரதி, புதுவை பரணி, புதிய உறவு, புதுவை கவிதை வானில் போன்ற இதழாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.



முழு நிகழ்வையும் திரு.லெனின் பாரதி அவர்கள் முன்னின்று செயல்படுத்தி சிறப்பு செய்துள்ளார்.

இந்த இயக்கம் சிறப்பான செயல்பாடை வெளிப்படுத்தி  பெரும் வெற்றியடைய சிற்றிதழ்கள் உலகம் வாழ்த்துகிறது. இந்த இயக்கத்தின் வெற்றிக்கு சிற்றிதழ்கள் உலகம் உறுதுணையாக இருக்குமென்று உறுதியளிக்கின்றேன்.

வாழ்த்துக்கள்.

கிருஷ்.ராமதாஸ் ,
சிற்றிதழ் நலம் விரும்பி,
18.11.2016.

No comments:

Post a Comment