ஒரு இலக்கிய எழுத்தாளுமையுடனான நட்பும், உரையாடலும்.
இலங்கை இலக்கிய எழுத்தாளுமை திரு.ரத்தின அய்யர் பத்மனாப அய்யர்.
எனது வாழ்நாளில் மகிழ்ச்சியான நாட்களாக கருதக் கூடிய நாட்களில் இன்றும் ஒன்றாக கருதுகின்றேன். ஆம். ஒரு ஆண்டுக்கு முன்பு அய்யா அவர்களுடன் நட்பு வேண்டி நான் விடுத்த அழைப்பு ஏற்கப்படாமலிருந்தது. அதில் எனக்கு வருத்தம் இல்லை. ஏன் என்றால் நம் செயல்பாடுகளை அவருக்கு அறியப்படுத்துவதில் ஏற்பட்ட தொய்வாகத்தான் நான் எடுத்துக் கொண்டேன். அப்படி ஒரு நிலை இருந்தால் அந்த நண்பர்களுடைய தளங்களுக்கு நானே வலியபோய் பதிவிற்கான பின்னூட்டங்களில் என் கருத்தை பதிவு செய்வேன். பிறகு அவர்களின் பார்வைபட்டு என்னை ஏற்றுக் கொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளது.
வளரி சிற்றிதழ் குறித்த வாசகர் எழுத்தாளர் திரு.சுப்ரா வே. சுப்ரமணியன் அவர்களின் விமர்சனம்
வணக்கம் நண்பர்களே. சிற்றிதழ்களை வாசகர்கள் மூலம் விமர்சனப்படுத்த " சிற்றிதழ் கொத்து புரோட்டா " என்ற பகுதியை சிற்றிதழ்கள் உலகம் அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக வளரி சிற்றிதழ் வாசகர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பப்பட்டு பெறப்பட்ட விமர்சனத்தில் சிறந்த விமர்சனமாக தேர்வு செய்யப்பட அய்யா திருநெல்வேலி சுப்ரா வே. சுப்ரமணியன் அவர்களின் விமர்சனத்தை இங்கே பதிவு செய்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அய்யா அவர்களுக்கு வளரி சிற்றிதழ் ஒரு ஆண்டுக்கு அனுப்பப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்கள் அய்யா.
தமிழ் இலக்கிய உலகில் சாதனைகளை படைத்து வரும் சிற்றிதழ்கள் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்து, தங்கள் வரலாற்றை பதிவு செய்வதிலும், தொடர் வெளியீட்டிற்கான மேம்பாட்டு திட்டங்களை முன்னெடுப் பதிலும், அரசு பயன்களைப் பெறுவதில் அக்கறை கொள்ளுதலும் இல்லாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தையும் அளிப்பதாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் புதுவையிலிருந்து புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் " புதுவை சிற்றிதழ் இயக்கம் " என்ற அமைப்பு துவங்கப் பட்டிருப்பது கடலில் இருக்கும் கப்பலுக்கான கலங்கரை விளக்கமாக வந்திருக்கிறது என்று கூறலாம். இந்த அமைப்பின் துவக்க விழாவில் குறைவான சிற்றிதழாளர்கள் கலந்து கொண்டிருந்தாலும், நல்ல துவக்கமாக நான் கருதுகின்றேன். குறைவானவர்கள் இருந்தாலும் குறை சொல்ல முடியாத, சிறந்த சிற்றிதழாளர்கள் இணைந்திருப்பது வரவேற்க்க கூடியதாகும்.
வணக்கம் நண்பர்களே. இன்று எழுத்துலக சிற்பி, தமிழ் சிற்றிதழ்களின் பிதாமகன் திரு.வல்லிக்கண்ணன் அவர்களின் பிறந்த நாள். அவரை நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அவர் எழுதிய "சரஸ்வதி காலம்" என்ற புத்தகத்தை இணையத்தின் மூலம் படிக்கத் துவங்கினேன். உள்ளே அத்தனையும் பொக்கிஷங்கள். மணிக்கொடி காலம் முதல் சரஸ்வதி காலம் வரை கட்டுரைகள் நீள் வடிவம் பெறுகின்றன. மணிக்கொடி துவங்கி ஒவ்வொரு ஆண்டாக வெளிவந்த சிற்றிதழ்களை எல்லாம் வரிசைப்படுத்தி இலக்கிய உலகை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் சிற்றிதழ்களின் பரிணாம வளர்ச்சியை அவர் வெளிக் கொண்டு வந்துள்ள விதம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. புதிதாக இந்த துறையில் நாட்டம் கொண்டு படிப்பவர் கூட எளிதாக புரிந்து கொள்ளும் எழுத்து நடையில் உள்ளது. அந்த இதழ்களையெல்லாம் இங்கே நான் வரிசைப் படுத்துகின்றேன். 1. மணிக்கொடி 2. சூறாவளி 3. கிராம ஊழியன்