Translate

Tuesday, April 25, 2017

என் மண்ணுக்கான மரியாதை இது.

என் மண்ணுக்கான மரியாதை இது.
மண்கவுச்சி வீசும் கோவிந்தன் ஓவியங்கள்
இரத்தின புகழேந்தி
ஆம். நண்பர்களே.
மண்கவுச்சி வீசும் கோவிந்தன் ஓவியங்கள். திரு.இரத்தின் புகழேந்தி அவர்களிடம் நம் இதழுக்கான கட்டுரை வேண்டி சில தலைப்புகளை கொடுத்தேன். அவர் திரு.கோவிந்தன் என்ற சிறந்த கலைஞரை பற்றி பதிவிட விரும்புகின்றேன் என்றார். 

உண்மையிலேயே அவரைப் பற்றி எனக்கு தெரியாது. அவ்வளவு தான் என் பொது அறிவு. கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட எனக்கு, நம் மாவட்ட திறமையாளர் ஒருவரை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன்


அவரிடமிருந்து கட்டுரை, படங்கள் பெற்ற பிறகு அவருடைய ஓவியத்தை மையப்படுத்தி முன் முகப்புப் படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தேன்.
பிறகு ஒரு சிந்தனை. சிற்றிதழ்கள் உலகம் இதழ் உலக அளவில் இணையத்தின் மூலம் போகிறது. முகப்புப் படத்தில் உலக தமிழ் வாசகர்கள் அறிந்த ஒருவரை போட்டால் அது இதழுக்கான மதிப்பைக் கூட்டும் என்ற எண்ணத்தில் மறைந்த அசோகமித்திரன் அவர்களின் படத்தைப் போட்டால் சிறப்பாக இருக்கும் என தீரமானித்தேன். எல்லா இதழ்களிலும் அவரின் உண்மை நிழல் படங்களையே போட்டிருந்தனர். நாம் அவர்களிடமிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்று திரு.ரேஷ்மி அகமது அவர்களின் அசோகமித்திரன் ஓவியத்தை தேர்வு செய்து வடிமைத்தேன்.

இருந்தாலும் திரு.கோவிந்தன் அவர்களை முக்கியத்துப்படுத்துவதற்காக முன் அட்டையிலும் படத்தை பதிவு செய்துள்ளேன். இரத்தின புகழேந்தி அவர்கள் கொடுத்த கட்டுரையையும், படங்களையும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே பதிவு செய்துள்ளோம். 

இதன் வடிமைப்பில் சிறப்புக் கவனம் செலுத்திய தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் கட்டுரையின் மதிப்பக் கூட்டியுள்ளார் என்றால் மிகையாகாது.



கட்டுரை தந்து உதவிய திரு.இரத்தின புகழேந்தி, தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கு நன்றியை காணிக்கையாக்குகின்றேன்.


நீங்களும் கவனியுங்கள் கோவிந்தன் அவர்களின் ஓவியத்தில் மண்கவுச்சி வீசுகின்றதா என்று நண்பர்களே.


நன்றி. வாழ்த்துக்கள்.

கிருஷ்.ராமதாஸ்,
25.04.17.

1 comment:

  1. மண் மணம் வீசும் ஓவியங்களை வழங்கும் திருமிகு கோவிந்தன் போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete