Translate

Thursday, April 27, 2017

தரமான சிற்றிதழ் தேடுவோருக்கு

தரமான சிற்றிதழ் தேடுவோருக்கு 
' தளம் ' சிற்றிதழ் 
ஆசிரியர் : பாரவி. 

வணக்கம் நண்பர்களே.
தரமான சிற்றிதழ் தேடும் வாசகர்களுக்கு நீங்கள் துணிந்து பரிந்துரை செய்ய அத்தனை தகுதிகளும் உள்ள சிற்றிதழ் தான் 'தளம்' சிற்றிதழ். இந்த இதழின் ஒவ்வொரு பக்கங்களிலும் ஆசிரியரின் முழு அர்ப்பணிப்பையும், சமரசம் இல்லாத உள்ளடக்கங்களை தேர்வு செய்துள்ள முறையும்,  நீங்கள் உணர்வீர்கள். அந்தளவு இதை ஒரு இதழாக இல்லாமல்,  இயக்கமாக கொண்டு சொல்லுகின்றார் இதன் ஆசிரியர் திரு.பாரவி அவர்கள். 




அத்தகைய இதழ் குறித்து நம்  சிற்றிதழ்கள் உலகம் இதழில் பதிவு செய்ய வேண்டும். உலக வாசகர்களுக்கு இந்த இதழை கொண்டு செல்ல வேண்டும் என்ற நீண்ட நாட்களாக எண்ணியிருந்தேன். 

அந்த நேரத்தில் தான் முக நூல் நண்பரும், என் பதிவுகளில் நிறை, குறைகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் நண்பர் சிதம்பரம்  திரு.செல்வராஜ் அவர்கள் தன்  முக நூலில் தளம் இதழின் முகப்புப் படம், முகவரி பதிவு செய்திருந்தார். 




எனக்கு எப்போதும் ஒரு இதழைப் பற்றி நாம் எழுதுவதை விட, ஒரு இதழை படித்து, உணர்வு பூர்வமாக அதனுடன் ஒன்றினையும், ஒரு வாசகன் எழுதுவதில் தான் ஒரு உயிர்ப்பு இருக்கும் என்று நம்புபவன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை செயல்படுத்தியும் வருகின்றேன்.  அந்த வகையில் அய்யா திரு.செல்வராஜ் அவர்களை தொடர்பு கொண்டு தளம் இதழ்  குறித்து விமர்சனம் எழுத வேண்டினேன். இதில் எனக்கு இன்னொரு சுய நலமும் உண்டு. என் முகநூல் பதிவுகளில் தொடர்ந்து கவணம்  செலுத்தும் நண்பர்களுக்கு  வாய்ப்பு கிடைக்குமிடங்களிலெல்லாம் இதழில் அவர்களை பங்கு கொள்ள வைக்க வேண்டும் என்பதாகும். 




அவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு ஒரு விரிவான விமர்சனக் கட்டுரை அனுப்பிக் கொடுத்தார்.  வழக்கம் போல் பக்க நெருக்கடி. இருந்த போதும் அப்படியே இதழில் பதிவு செய்தோம். 

அந்த இதழின் முகப்புப் படம் - மறைந்த பெருங் கவிஞன் இன்குலாப் அவர்களின் கோட்டோவியத்துடன் அமைந்திருந்தது மிகச்  சிறப்பாக  இருந்தது.  30 ஆண்டுகளானாலும் மனதை விட்டு அகலாத - மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா என்ற உணர்ச்சி மிக்க பாடலை சமூக வெளிக்கு அளித்தவர். ஒவ்வொரு சமூக செயல்பாட்டாள் மனதிலெல்லாம் இன்றளவும் ஒலிக்கும் பாடல். 

இந்த இதழின் ஆசிரியர் திரு.பாரவி அவர்கள் இலக்கிய உலகின் குறிப்பிடத்  தகுந்த சிலரில்  ஒருவர். கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, சமரசம் இல்லா கொள்கை முடிவுகள், இது தான் இவரின் தாரக மந்திரம். தளம் இதழை ஒரு தவமாக நடத்தி வருகின்றார் என்றால் மிகையாகாது. தளம் இதழை ஒரு இயக்கமாக கொண்டு செல்கின்றார். வாழ்த்துக்கள் அய்யா

சிற்றிதழ்கள்  உலகத்தின் வேண்டுகோளை சிர மேற் கொண்டு விமர்சனக் கட்டுரை  உடன் அளித்த அய்யா சிதம்பரம் திரு.செல்வராஜ் அவர்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.




நண்பர்களே அவசியம் படியுங்கள். சிற்றிதழ்கள் மேம்பட உங்கள் ஆதரவுக் கரங்களை சந்தா செலுத்துவதன் மூலம் காட்டாத்  தவறாதீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.

கிருஷ்.ராமதாஸ்,
28.04.17.

1 comment:

  1. மிக அருமையான கட்டுரை...
    தளம் இதழின் ஆசிரியர் அவர்களுக்கும் அது குறித்து விரிவாய் பகிர்ந்த செல்வராஜூ ஐயா அவர்களுக்கும்... சிற்றிதழ்கள் உலகத்தை சிறப்பாக கொண்டு செல்லும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete