Translate

Friday, October 14, 2016

உலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை.


உலக சிற்றிதழ் வரலாற்றில் இமாலய சாதனை.

விருட்சம் சிற்றிதழின் மாபெரும் வெற்றி 

100வது இதழ் வெளியீடு.

சந்திரமவுலி அழகியசிங்கர் என்ற இலக்கிய பேரார்வலரின் இந்த உழைப்பு, அர்ப்பணிப்பு, தமிழ் மீது கொண்ட காதல், தளராத மன வலிமை அத்தனையும் இந்த இமாலய சாதனைக்கான காரணிகளாக உள்ளது என்றால் மிகையாகாது. அவருடைய இனிமையான அணுகுமுறையும், இதயத்திலிருந்து  வெளிப்படும் வஞ்சகமில்லா அன்பும், ஒவ்வொரு இதழின் மீதும் அவர் காட்டும் அக்கறையும் எழுத்தில் அடங்கா செயல் திறன்கள் என்பதை அவரைப் பற்றி நண்பர்கள் இடும் பதிவின் மூலமும், அவருடைய பதிவுகளின் மூலமும் நான் அறிந்திருக்கின்றேன். அவரைக் கண்டு இன்றளவும் வியந்து வருகின்றேன். 



100 இதழ்கள் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத உலக சாதனை. இந்த சாதனை ஒரு நாளில் வந்ததில்லை. 28 வருடங்களின் வலி, வேதனை, ஏமாற்றம், பொருளிழப்பு உள்ளடக்கியது தான் இந்த வெற்றி.
இத்தனையையும் மீறி குடும்பத்தினர் ஒத்துழைப்பு, நண்பர்களின் உதவி, எழுத்தாளர்களின் பங்களிப்பு, வாசகர்களின் தொடர் ஆதரவு என்ற படிகளில் ஏறித்தான் அய்யா அழகியசங்கர்  சந்திரமவுலி அவர்கள்  இந்த வெற்றியை அடைந்துள்ளார் என்றால் மிகையாகாது. 

இந்த மாபெரும் வெற்றியை அவருக்குத் தந்துள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நன்றியினையும் சிற்றிதழ்கள் உலகம் சார்பாக உரித்தாக்குகின்றேன். 

தன்னிகரில்லா அர்ப்பணிப்பு, தமிழின் மீது கொண்ட தணியாத காதல் மூலம் சிற்றிதழ் உலகுக்கும், இலக்கிய உலகுக்கும் முன்னுதாரணமாக வெளி வந்துள்ள 100வது இதழின் நாயகன் அய்யா அழகியசிங்கர்  அவர்கள் இந்த இதழைப் போல 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து சிற்றிதழ் உலகுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்று என் அன்பிற்குரிய வாழ்த்துகளை அவரின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
வாழ்த்துக்கள் அய்யா. 

விருட்சம் இதழின் முகவரி:

சந்திரமவுலி அழகிய சிங்கர்,
6/5, போஸ்டல் காலனி முதல் தெரு,
மேற்கு  மாம்பலம்,
சென்னை - 600 033.

EMAIL : navina.virutcham@gmail.com



கிருஷ்.ராமதாஸ், 
சிற்றிதழ் நலம் விரும்பி, 
14.10.2016.



6 comments:

  1. இன்று தான் வாய்ப்பு கிடைத்தது.வலைக்குள் வர..சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சிறப்பாக உள்ளது. தொடரட்டும் நற்பணி!

    ReplyDelete
  3. சிறப்பு ஐயா. விருட்சம் நூறாவது இதழில் எனது கவிதையும் வந்துள்ளது. மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. வாழ்த்துக்கள் அய்யா.

      Delete