Translate

Tuesday, April 25, 2017

கலா புவன் கவிதை

கலா புவன் கவிதை
சிற்றிதழ்கள் உலகம் இதழ் - 3
கிருஷ்.ராமதாஸ்.
மகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பர்களே. 
கலா புவன் அவர்களின்  முகநூல் பதிவிலிருந்து நானாகவே எனக்கு பிடித்திருந்த ஒரு கவிதையை தேர்வு செய்து அதை சேமித்துக் கொண்டேன். அதற்க்காக அவர் பதிவிட்டிருந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. அது வரை அறிமுகம் இல்லை. 


இந்தக் கவிதையை சிற்றிதழ்கள் உலகம் இதழில் வெளியிட ஒப்புதல் கோரி மெயில் அனுப்பினேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியுற்று, என் வேண்டுகோளுக்கிணங்க அவருடைய படத்தையும் அனுப்பி உதவினார். இந்த கவிதை, படம், அவருடைய படம் மூன்றையும் ஒரு முழு பக்கத்தில் வெளியிடுவதாக திட்டம். ஆனால் பக்க நெருக்கடி காரணமாக அரை பக்கத்தில் வெளியிட்டோம்.
இன்று அவருடைய முக நூலில் அந்த பதிவிற்கு கிடைத்துள்ள பாராட்டு, வரவேற்பு, மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சற்று முன்னர் பார்த்தேன். 100 விருப்பக் குறிகளும். 40 வாழ்த்து பதிவுகளும் இருந்தன.
இங்கே தான் எனக்கு ஒரு வியப்பான கேள்வி அல்லது சந்தேகம்.
கலா புவனின் கவிதையை வெளியிட்டதால் சிற்றிதழ்கள் உலகம் பெருமையடைந்ததா? அல்லது சிற்றிதழ்கள் உலகத்தில் கவிதை வந்ததால் கலா புவன் பெருமையடைந்தாரா?



இனம் புரியாத குழப்பம் தான். இருந்தாலும் ஒரு மாட்டு வண்டியில் கட்டப்பட்டிருக்கும் இரண்டு காளைகள் போன்றது தான் இது என்று நீங்கள் கூறுவது புரிகிறது நண்பர்களே.
ஆம். இலக்கிய வெளியில் ஒரு இதழும் , எழுத்தாளரும் ஒன்றினையும் போது தான் அது வெற்றியின் அடையாளமாக மாறுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு என நான் நம்புகின்றேன். அதைத்தான் நாங்கள் இருவரும் செய்துள்ளோம் என்றும் நம்புகின்றேன்.
இதில் ஒரு படி மேலே போய் புதிய எழுத்தாளர்களுக்கு எழுத்து வெளியை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற சிற்றிதழ்கள் உலகத்தின் நோக்கத்திற்கான ஒரு வெற்றியாகவும் நான் கருதுகின்றேன்.
இத்தனையும் சாத்தியமானது உங்களைப் போன்ற சிற்றிதழ்கள் ஆதரவாளர்களாலும், வாசகர்களாலும் மட்டுமே என்பதில் அய்யம் இல்லை. நன்றி. 
நண்பர்களே வாழ்த்துக்கள்.
கிருஷ்.ராமதாஸ்,
25.04.17.

No comments:

Post a Comment