Translate

Wednesday, April 26, 2017

பாரதி எனும் பத்திரிக்கையாளன்

பாரதி எனும் பத்திரிக்கையாளன்
முனைவர் சங்கரராம பாரதி
சிற்றிதழ்கள் உலகம் 3வது இதழ்.

வணக்கம் நண்பர்களே.
முக நூலில் நான் பயணிக்கும் கடந்த 6 வருடமாக உற்று நோக்கிய சிலரில் என்னைக் கவர்ந்தவர்களில்  தம்பி சங்கரராம பாரதியும் ஒருவர். ஆசிரியராக, எழுத்தாளராக, மேடைப் பேச்சாளராக, என் ஆதர்ச நாயகன் பாரதியின் புகழ் பாடும், பாவலராக வலம் வருபவர் இவர்.



நான் என் ஆதர்ச நாயகன் என்று பாரதியைக் குறிப்பிட்டதற்கு காரணம், என் இளமை நாட்களில் புத்தகம், கவிதை, இலக்கியம் என்ற பாதையில் பயணிக்க வைத்த புத்தகங்கள் இரண்டு. அவை:
1. கவிராஜன் கதை - வைரமுத்து
2. சோழ நிலா - மு.மேத்தா.
ஆம் நண்பர்களே. கவிராஜன் கதையில் பரதியின் இறுதி ஊர்வலத்தில் 10 பேர்  தான் இருந்தார்கள் என்று படித்து அழுதிருக்கின்றேன். ஒரு மாபெரும் கவிஞனின் இறுதி ஊர்வலம் நாதியற்று போனதைக் கண்டு மனம் கலங்கினேன். அது முதல் கொண்டு அவனின் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்தேன்.
அதே போல மு.மேத்தாவின் சோழ நிலா என்னைக் கவர்ந்த புத்தகம். அதன் பிறகு மேத்தாவுக்கு என் வீட்டு நூலகத்தில் தனி மரியாதை கிடைத்தது. இதை என் கவிதையும் வாசித்தலும் என்ற கவிதையில் பதிவு செய்தேன்.
தம்பியை தொடர்பு கொண்டு நீங்கள் சிற்றிதழ்கள் உலகம் இதழுக்கு ஒரு கட்டுரை எழுத வேண்டும். அதுவும் பாரதியைப் பற்றியதாக  இருக்க வேண்டும் என்று கேட்டேன். மறுப்பு எதுவும் சொல்லாமல், மிக்க மகிழ்ச்சி அண்ணா என்றார். அங்கே தான் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. 

பொதுவாக நான் எழுத்தாளர்களை அணுகும்  போது எடுத்த எடுப்பிலேயே இதழுக்கு கட்டுரை, கவிதை வேண்டுமென்று கேட்பது இல்லை. முதலில் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டு, உங்கள் இமெயில் கொடுங்கள். இதழ்களின் பிடிஎப் அனுப்புகின்றேன் என்று கூறி அனுப்பி வைப்பேன். இது நம் இதழைப் பற்றி ஒரு உருவத்தை அவர்களுக்கு கொடுக்கும் என்பதால் தான்,  இந்த அணுகுமுறையை நான் கடைபிடித்து வருகின்றேன்.


அதே போன்று சங்கரராம பாரதி அவர்களிடமும் கேட்டேன். அவர் அய்யோ அண்ணா அதெல்லாம் வேண்டாம். நான் அறிவேன். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கூறி என் வேண்டுகோளை ஏற்று கட்டுரை கொடுத்து உதவினார்.


 

பிறகு தான் நான், இந்த கட்டுரை நம் இதழில் மற்ற இதழ்களிலிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, அதற்கான படங்களை தேர்வு செய்தேன். பாரதி செல்பி எடுப்பது போல் முக நூல் நண்பர் [பெயர் குறிக்காமல் விட்டுவிட்டேன். அந்த நண்பர் மன்னிக்க வேண்டும்] தளத்திலிருந்து எடுத்ததை போட்டால் வித்தியாசமாக இருக்கும் என்று தீர்மானித்தேன். உண்மையிலேயே வாசகர்களிடம்  அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அடுத்து கட்டுரையில் பாரதி பங்கெடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ள இதழ்களையெல்லாம் வாசகர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தீர்மானித்து, அத்தனையும் சேகரித்து,  இதழில் அணி வகுக்க வைத்துள்ளேன். இதுவும் பாராட்டை பெற்றுள்ளது.

தம்பியிடம் இருந்து கட்டுரை  வந்ததும், பெரியதாக இருக்கிறது, இருந்தாலும் அப்படியே வெளியிட வேண்டும் என்று அன்பு நண்பர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்களிடம், குறைக்காமல் போட வேண்டும் என்று வேண்டினேன்.அவரும் மிக அருமையாக வடிமைத்து அந்தக் கட்டுரையின் மதிப்பைக் கூட்டியுள்ளார் என்றால் மிகையாகாது. 

இந்த நேரத்தில் ஒரு வருத்தமான நிகழ்வையும் பதிவு செய்ய வேண்டியது என் கடமை. சிற்றிதழ்கள் உலகம் இதழ் திட்டம் 36 பக்கம் தான். எல்லையை விரிவாக்குவதால் கடும் பக்க நெருக்கடி. ஒப்புதல் அளித்த உள்ளடக்கங்களை போட முடியாத நிலை. 48 பக்கம் வந்தது. மிகச் சிரமப்பட்டு 44 ஆக குறைத்தோம். பக்கம் அதிகமானால் அச்சு செலவு, எடை கூடுவதால் அஞ்சலக செலவு கூடுகிறது. அதனால் கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றோம். 

கடைசி நேரத்தில் இந்த கட்டுரை வெளியிட முடியாத நிலை. அதனால் அபுதாபி நண்பர் நௌஷத்கான் சிறுகதை சாத்தானின் எண் 666 என்று  வடிவமைப்பில் முடிந்த சிறுகதையை அடுத்த இதழுக்கு மாற்றிக் கொள்ள அவரிடம் ஒப்புதல் வேண்டினேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். நன்றி நௌஷத்கான். உங்கள் உதவி மகத்தானது.


மிக அருமையான ஒரு கட்டுரையை சிற்றிதழ்கள் உலகம் இதழுக்கு பெருந்தன்மையுடன் வழங்கிய தம்பி  முனைவர் சங்கரராம பாரதி அவர்களுக்கு இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் தம்பி.
நன்றி. வாழ்த்துக்கள். 




இது வரை நீங்கள் கண்ட பாரதியிலிருந்து ஒரு வேறுபட்ட பாரதியை உங்களுக்கு அளித்துள்ளோம். படித்து, மகிழ்ந்து, உங்கள் கருத்துக்களை பதிவு செர்ய்யுங்கள் நண்பர்களே.
நன்றி. வாழ்த்துக்கள்.

கிருஷ்.ராமதாஸ்,
26.04.17.

No comments:

Post a Comment